விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி62 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சூசகமாக கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. அதனையடுத்து விஜயின் 62-வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத தளபதி62 படத்திற்கான பூஜை பனையூரில் இன்று நடைபெற்றது. முதல்கட்டமாக சென்னையில் 30 நாட்கள் படப்பிடிப்பும், தொடர்ந்து கொல்கத்தாவில் படப்பிடிப்பை நடத்தவும் முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தளபதி62 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2012, 2014 தீபாவளி நாளில் வெளியான, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ திரைப்படங்கள் செம ஹிட் அடித்தது. ‘தளபதி62’ படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் ஏவி.எம் ஸ்டியோவில் நடைபெற்றது.
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி