2ஜி வழக்கில் வினோத் ராயை விசாரிக்க வேண்டும்: ஆ.ராசா பேட்டி

2ஜி வழக்கில் வினோத் ராயை விசாரிக்க வேண்டும்: ஆ.ராசா பேட்டி
2ஜி வழக்கில் வினோத் ராயை விசாரிக்க வேண்டும்: ஆ.ராசா பேட்டி

2ஜி வழக்கு தொடர்பாக முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் விசாரிக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். 

2ஜி வழக்கு தொடர்பான ஆ.ராசாவின் புத்தகம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ராசா விரிவான பேட்டி அளித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டீல் வினோத் ராய், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளதன் பின்னணியில் பெரிய அரசியல் சதி இருப்பதாகவும் ராசா தெரிவித்துள்ளார். 

வினோத் ராய் தனக்கு அளிக்கப்பட்ட அரசியல் சாசன அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருந்ததை தன்னால் உறுதிபட கூற முடியும் என்றும் ராசா கூறியுள்ளார். வினோத் ராயை பின்னிருந்து இயக்கியது யார் என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் பேட்டியில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com