கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் இஷாந்த் சர்மாவுடன் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை என்று அவர் மனைவி பிரதிமா சிங் கூறியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் மனைவி பிரதிமா சிங், கூடைப்பந்து வீராங்கனை. டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போது சென்னையில் நடந்து வரும் 68ஆவது தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிமா கூறும்போது, 'இஷாந்த் சர்மாவுடன் கிரிக்கெட் பற்றி பேசுவதில்லை’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ’இஷாந்த் சர்மா எப்போதும் கிரிக்கெட் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். அதுதான் அவர் வேலை. அதைப்பற்றிதான் அவர் சிந்திக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அதிகமாக அதையே நினைத்து உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுக்காதீர்கள் என்பேன். வீட்டில் அவரிடம் கிரிக்கெட் பற்றி பேசமாட்டேன். அவரும் கூடைபந்து பற்றி என்னிடம் பேசமாட்டார். ஆனால், அவரை நான் ஊக்கப்படுத்துவேன். வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என்று சொல்வேன். அப்படி அனுபவித்தால் நன்றாக விளையாட முடியும் என்பது என் அனுபவம். கூடைப்பந்து போட்டிகளுக்காக நானும் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் அவருடன் அதிகமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடிவதில்லை’ என்றார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்