பருவகால மாற்றத்தால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே மிளகு முழு விளைச்சலுக்கு வந்துள்ளது.
உலகின் மிளகு தேவையை 34 சதவீதம் வியட்நாமும், மீதியை இந்தியாவும் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. நாட்டின் 95 சதவீத மிளகு உற்பத்தி கேரளாவில் மட்டும் நடக்கிறது. அதிலும் கேரளாவின் மிளகு உற்பத்தியில் 85 சதவீதம் இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
இடுக்கி மாவட்டத்தில் 35,000 ஹெக்டேர் பரப்பில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 25 சதவீதம் முழுக்க முழுக்க மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டின் மார்ச் மாதம் முதல் மிளகு வரத்து ஆரம்பிக்கும். ஆனால் கேரளாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து, பருகாலங்கங்களில் மாற்றம் ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தற்போது மிளகு முழு விளைச்சலை அடைந்துள்ளது. சில இடங்களில் மிளகு பறிக்கும் பணியும் துவங்கியுள்ளது. எனவே, இன்னும் ஒரு மாதத்தில் மிளகுவரத்து அதிகரிக்கும் எனவும், மிளகு விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குமுளி, தேக்கடி உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோ மிளகு 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலை போகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்