[X] Close

கமல்-ரஜினி-விஷால் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

Actor-Prakash-Raj-said-Rajini--Kamal--Vishal-need-Join-in-election

தேர்தலை சந்திக்கும் போது கமல்-ரஜினி-விஷால் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே குழுமம் சார்பில் கருத்தரங்கம் ஒன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். கண்டிப்பாக இவர்களால் மக்கள் விரும்புவதை கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை இவர்கள் மூவரின் கொள்கை என்பது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதாகவே இருக்கிறது. எனவே தேர்தலை சந்திக்கும் போது மூவரும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் எப்போதும் கேள்வி கேட்காமல் வாக்களிப்பவர்களாக உள்ளார்கள். யார் தேர்தலில் நின்றாலும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையானவற்றை பெற முடியும். நன்மை செய்யும் தலைவர்களை அடையாளம் காண முடியும்” என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close