Published : 18,Jan 2018 02:09 AM
டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 24வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 24வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது.60 முதல் 70 பொருட்களுக்கு வரி குறைக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டுவரப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது, ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு குறித்தும் வரி செலுத்தல் மற்றும் கணக்கு தாக்கல் நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.