[X] Close

இன்னோவா சம்பத்;மறுபடியும் நாஞ்சில் சம்பத் ஆனார் 

Finally-Nanjil-Sampath-Surrendered-Innova-Car-in-ADMK-Office

அதிமுக தலைமை அலுவலத்தில் ஜெயலலிதா அளித்த இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் ஒப்படைத்தார்.


Advertisement

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டார். இதனையடுத்து ஜெயலலிதாவால் அவருக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக தலைமை திரும்பக் கேட்டது. இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை  அதிமுக தலைமை அலுவலத்தில் ஒப்படைத்தார்.

நாஞ்சில் சம்பத்தும் இன்னோவா காரும்


Advertisement

மதிமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த போது ஜெயலலிதாவால் நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டது. இன்னோவா கார் தனக்கு பிடித்தமான கார். நோவாமல் பயணம் செய்யவேண்டும் என்றால் அதன் பேர் இன்னோவா. இந்த காரில் பயணம் செய்யப்போகிறேன் என்றால் பள்ளியறைக்கு செல்லும் மணமகன் போன்று குதூகலமாக செல்வேன் என முன்பு கூறியிருந்தார். தற்போது அப்படிப்பட்ட காரை அவர் திருப்பி அளித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close