Published : 17,Jan 2018 02:52 AM

எம்ஜிஆர் பிறந்தநாளில் மம்தா பானர்ஜி புகழாரம்

Mamata-Banerjee-remember-MGR-Birthday-on-her-twit

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். 

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தமிழகம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதேபோல், திருவள்ளுவர் தினத்திற்கு கூறிய வாழ்த்து செய்தியில் தமிழகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாளில், “சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞரான எம்.ஜி.ராமசந்திரனை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம்” என்று மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்