[X] Close

அண்ணனுடன் பொங்கல் கொண்டாடிய தனுஷ்

selvaraghavan-pongal-tweets

தம்பி தனுஷூடன் இந்த வருடப் பொங்கலைக் கொண்டாடியதாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

செல்வராகவனும் தனுஷூம் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இருமகன்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்வது முடியாமல் போனது. தனுஷ் பிசியான நடிகரான பிறகு அவர் வீட்டில் இருப்பதே அரிதாகிவிட்டது. ஆகவே அவர்கள் சந்தித்துக் கொள்வதும் கூட அரிதான விஷயமாகிப் போனது. ஏதாவது வீட்டு விஷேச நிகழ்ச்சிகளில் உறவினர்கள்  ஒன்றுகூடுவர். இந்நிலையில் இந்த வருடப் பொங்கலை தம்பி தனுஷூடன் கொண்டாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் கூறியுள்ளார். மேலும் அவர், “அன்பு தம்பியுடன் அருமைப் பொங்கல்..ஆயிரம் ஆனந்தங்கள்  இருந்தாலும் கூடப் பிறந்தவர் கூட்டம் கூடிக் குலாவும் குதூகலம் வருமோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close