[X] Close

இளையராஜா இசையில் ’கடவுள்2’

Director-Velu-Prabhakaran-is-back-with-his-next-film-titled-Kadavul-2

’கடவுள்2’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபு, அமலா, ஜெய்சங்கர் நடித்த ‘நாளை மனிதன்’ படத்தின் மூலம் இயக்குநரானவர் வேலு பிரபாகரன். அதன்பிறகு சில படங்களை இயக்கியவர், 1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்காக சிறந்த வசனகர்த்தாவிற்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார்.

தற்சமயம் இவர் ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். அதற்கு ‘கடவுள்2’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா வரும் 18 தேதி சென்னையில் நடைபெற உள்ளது.  விழாவில் இயக்குநர் பாரதிராஜாவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் வேலு பிரபாகரன் இயக்கவுள்ள ‘கடவுள் 2’ படத்தின் கதை தற்போது நடைபெற்றுவரும் ஆண்டாள் சர்ச்சையாக இருக்கக் கூடும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close