‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’படத்தின் ட்ரெய்லர் வெளியானது

‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’படத்தின் ட்ரெய்லர் வெளியானது
‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’படத்தின் ட்ரெய்லர் வெளியானது

ராம்கோபால் வர்மா இயக்கிய ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் ராம் கோபால் வர்மா. ஏராளமான இந்திப் படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, நந்தி விருதுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றவர். ட்விட்டரிலும் துரிதமாக செயல்படுவர். இது மட்டுமல்ல, பலரையும் வம்புக்கிழுக்கும் பழக்கமும் கொண்டவர். சர்ச்சை கருத்துகளையும் தயக்கமின்றி வெளிப்படுத்துவார்.

ராம் கோபால் வர்மா  ‘ஜிஎஸ்டி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜிஎஸ்டி என்றால் சரக்கு மற்றும் சேவை வரி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.. ‘காட், செக்ஸ், அண்ட் ட்ரூத்’. இதில் அமெரிக்காவை சேர்ந்த நடிகை மியா மல்கோவா உடையின்றி நடித்திருக்கிறார். மியா மல்கோவா உடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் சன்னி லியோனுக்கு அடுத்தப்படியான இரண்டாவது அடல்ட் நடிகை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் உடனே சமூக வலைத்தளங்களில் வைரலானது. ‘காட் செக்ஸ் அண்ட் ட்ருத்’ படத்தில் நடித்த அனுபவம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அப்படத்தில் நாயகி மியா மல்கோவாவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ராம் கோபால் வர்மா தனது யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரை ட்விட்டரில் பலபேர் ஷேர் செய்து வருகின்றனர். முழுப் படம் குடியரசுத் தினமான ஜனவரி 26ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் எனவும் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com