தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக, உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவான மாட்டுப் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கால்நடைகளுக்கு உணவளிப்பது, அவற்றிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
பாஜகவின் தமிழக தலைவரான தமிழிசையும், மாடு ஒன்றுக்கு உணவளிப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு, மாட்டுபொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார். போட்டோ வைரலுக்கு காரணம் மாட்டுப் பொங்கல் வாழ்த்தல்ல.
தமிழிசை அணிந்திருந்த சட்டையில் இடம்பெற்றிருந்த தாமரை. சாதாரணமாக தாமரை பூவானது நீண்ட காம்புகளை கொண்டதாக இருக்கும். அதன் இலைகள் மிகவும் பெரியதாக , படர்ந்து காணப்படுவதாக இருக்கும். அதாவது இலைகளுக்கும், மலருக்கும் இடையே தொடர்பில்லாத வகையில் தாமரை பூ இருக்கும். பறித்தாலும் கூட நீண்ட காம்புகளோடு மலர் மட்டும் தனியே கிடைக்கும்.
இப்படி இருக்க, தமிழிசை சட்டையில், இரட்டை இலையும், தாமரை மலரும் இணைந்து இருப்பது போன்ற எம்ப்ராய்டரி ஓவியம் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சமூக வலைத்தளவாசிகள், இரட்டை இலையும் தாமரையும் இணைந்து விட்டதா..?, தமிழகத்தை பாஜக ஆள்கிறதா..?, அரசியல் சூழலை தமிழிசை வெளிப்படுத்தி விட்டார் என பேசத் தொடங்கி விட்டார்கள். தமிழிசையின் அந்த புகைப்படத்தையும் பரவலாகவும் பகிர்ந்து வருகிறார்கள்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix