Published : 16,Jan 2018 04:07 AM
அலங்காநல்லூரில் சிறந்த காளை, காளையருக்கு கார் பரிசு!

அலங்காநல்லூரில் சிறந்த காளை மற்றும் காளையருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வேறு எந்த ஜல்லிக்கட்டிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும், காளையர்களுக்கு பரிசு வாரி வழங்கப்பட்டுள்ளது. கம்பீரமான காளைகள் வீரர்கள சிதறடிக்கும் வகையில் சீறிப்பாய்ந்து வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு எடப்பாடி பழனிசாமி சார்பிலும், சிறந்த காளையாக தேர்வாகும் மாட்டுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சார்பிலும் புதிய கார் வழங்கப்படவுள்ளது.