Published : 15,Jan 2018 12:23 PM

ரசிகர்களால் நிரம்பி வழிந்த சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி!

Shankar-Mahadevan-s-music-show-full-of-fans

தனியார் கல்லூரி நடத்திய கலைநிகழ்ச்சியில், சங்கர் மகாதேவனின் பாடலை கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டர்.

மங்களூரில் மூட் பிடரி என்ற இடத்தில் தனியார் கல்லூரி நடத்திய கலை நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் அவரது குழுவினருடன் கலந்துக் கொண்டார். இனிமையான மாலை பொழுதில், திறந்த வெளியில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள், உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

இதில்,அவரின் குரலில் வெளிவந்த அனைத்து பாடல்களையும், சங்கர் மேடையில் பாடினார். இந்தப் பாடல்களுக்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்கள் உற்சாகத்துடன் பாடல்களை ரசித்தனர். நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய சங்கர் மகாதேவன், மங்களூர் ரசிகர்களுக்கு தனது நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், சுமார், 50,000 க்கும் மேலான மக்கள் கலந்துக் கொண்டதாக சங்கர் மகாதேவன் தனது ட்விட்டில் பதிவிட்டுள்ளார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்