[X] Close

133 அடி நீளத்தில் தத்ரூப திருவள்ளுவர் மணல் சிற்பம்: காண்போர் வியப்பு

Thiruvalluvar-sand-sculpture-in-Mamallapuram

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் 133 அடி நீளத்திற்கு திருவள்ளுவர் மணல் சிற்பம் மிகத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாட்டு பொங்கலான தை 2-ஆம் நாளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் 133 அடி நீளத்திற்கு திருவள்ளுவர் மணல் சிற்பம் மிகத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சிற்பக் கலைக்கல்லூரி மாணவர்களும், மல்லை தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து இந்தச் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.

100 டன் மணலைப் பயன்படுத்தி இரவு பகல் பாராமல் சிற்பத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் இவ்வளவு பெரிய மணல் சிற்பச் சிலை இதுவரை உருவாக்கப்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக வண்ணப் பொடிகளைக் கலக்காமல் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவைக் காண வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கிலத்திலும், பிறருக்கு தமிழ் மொழியிலும் ஆன திருக்குறளை வழங்கவிருப்பதாக சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தெரிவித்தனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close