Published : 01,Mar 2017 08:36 AM

சிறிய நூலகமாக மாறிய ஸ்டாலின் பிறந்தநாள் மேடை

Stalin-birthday--Cadres-gifts-books

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் அளித்த புத்தகங்களால், பிறந்தநாள் விழா மேடை சிறிய நூலகமாகக் காட்சியளித்தது.

பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை ஸ்டாலின் சந்தித்தார். அவருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தொண்டர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, திமுக தொண்டர்கள் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். அவர்கள் அளித்த புத்தகங்களால் பிறந்தநாள் விழா மேடை, சிறிய நூலகமாகக் காட்சி அளித்தது. பிறந்த நாளுக்கு சால்வை அணிவிப்பதைத் தவிர்த்து, புத்தகங்கள் வழங்க முன்வர வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்