’நாடோடிகள் 2’ படத்தில் சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
சசிகுமார், அனன்யா, அபிநயா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம், ‘நாடோடிகள்’. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் வசந்த், பரணி, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், நமோ நாராயணன் உட்பட பலர் நடித்திருந்தனர். குளோபல் இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம்.
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க உள்ளனர். நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், சமுத்திரக்கனி- சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். மற்றும் முதல் பாகத்தில் நடித்த பரணி உட்பட சிலர் இதிலும் நடிக்கின்றனர். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!