இரண்டாவது டெஸ்டில் சரியாக விளையாடவில்லை என்றால் விராத் கோலி தன்னைத்தானே, ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இருந்து தவான், விக்கெட் கீப்பர் சஹா, முதல் டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தப் போட்டியிலும் ரகானே இடம்பெறாதது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் விராத் கோலியின் அணி தேர்வு குறித்து சேவாக், சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக, தவானை நீக்கியிருக்கிறார்கள். புவனேஷ்வர்குமாரை காரணமே இல்லாமல் உட்கார வைத்திருக்கிறார்கள். இப்போது நடக்கும் இரண்டாவது டெஸ்டில் சரியாக விளையாடவில்லை என்றால் விராத் கோலி, அடுத்த போட்டியில் ஆடும் லெவனில் இருந்து தன்னைத்தானே வெளியேற்றிக்கொள்ள வேண்டும். புவனேஷ்வர்குமாரை நீக்கியது சரியான முடிவல்ல. அவரது தன்னம்பிக்கையை குலைத்து, காயப்படுத்திவிட்டார் விராத் கோலி. முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஒருவரை இரண்டாவது டெஸ்டில் சேர்க்காமல் உட்கார வைத்திருப்பது நியாயமானதல்ல’ என்று கூறியுள்ளார்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்