[X] Close

நெல்லை கொலை: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள்

CCTV-footage--shocking-nellai-murder-case

நெல்லையில் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதியை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த போது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சிங்காரம் என்ற கைதியை, கடந்த 25 ஆம் தேதி, பாளையங்கோட்டை சிறையிலிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தை வழிமறித்தனர். அவர்கள் காவலர்களின் கண்களில் மிளகாய் பொடி கலந்த நீரை தெளித்தனர். காவலர்கள் தடுமாறிய நிலையில் சிங்காரம் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த சிங்காரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.


Advertisement

இந்தக் கொலைச் சம்பவத்தின் போது, கைதியுடன் வாகனத்தில் பாதுகாப்புக்காகச் சென்ற காவலர்கள் அலறி அடித்து ஓடிவரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பின்னர், கொலையாளிகள் காரில் ஓடிச் சென்று ஏறித் தப்பிச் செல்லும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close