ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 70 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016, டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது யார் என தெரிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பட்டியல் அளித்த பின் 15 நாளில் சசிகலா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?