Published : 12,Jan 2018 05:21 AM

விலை உயர்வால் ரேசனில் உளுந்து வழங்க இயலாது: செல்லூர் ராஜூ

Sellur-Raju-said-Urad-Dal-cannot-provide-in-Ration-for-price-Increase

விலைவாசி உயர்வு காரணமாக, ரேசனில் உளுந்து வழங்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தில், ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கவில்லை என சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வெளிச்சந்தையில் உளுந்தம்பருப்பு ரூ.170க்கு விற்பனையாகும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய உளுந்தம்பருப்பு மானியத்தை நிறுத்தி விட்டதாக கூறினார். இதனால் அரசுக்கு மாதம்தோறும் ரூ.207 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதால், ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்புக்கு வழங்க இயலவில்லை என்றார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்