[X] Close

கட்சி விரோத நடவடிக்கை: அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

ops-and-eps-removed-officers-from-admk

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 100க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில், சேலம் மாவட்டத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்பட 30க்கும் அதிகமான நிர்வாகிகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 20க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். கோவை புறநகர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 20க்கும் அதிகமானோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close