[X] Close

கேரள முதலமைச்சர் ஆகிறார் மம்மூட்டி!

Mammootty-to-play-Kerala-CM-for-the-first-time

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது அடுத்தப்படத்தில் கேரள முதலமைச்சராக நடிக்கிறார்.

சீனிவாசன், குஞ்சாக்கோ போபன், ரிமா கல்லிங்கல் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’சிறகொடிஞ்ச கிணவுகள்’. மலையாள ஸ்பூஃப் படமான இது, அங்கு ஹிட்டானது. இந்தப் படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் அடுத்து அரசியல், த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இதில் மம்மூட்டி கேரள மாநில முதலமைச்சராக நடிக்கிறார்.

’இந்தக் கதையை கேட்டதும் மம்மூட்டி, உடனடியாக நடிக்கிறேன் என்றார். அரசியல்வாதியாக பல படங்களில் மம்மூட்டி நடித்திருந்தாலும் முதன்முறையாக மலையாளப் படத்தில் கேரள முதலமைச்சராக நடிக்கிறார். தமிழில் ’மக்களாட்சி’ படத்தில் முதலமைச்சராக நடித்திருந்தார் மம்மூட்டி. அவர் இந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால், இந்தப் படத்தை கைவிட்டிருப்போம்’’ என்றார் இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close