பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர் ஒருவர், மலைப்பாதையில் தனது நண்பரிடம் பேருந்தை கொடுத்து ஓட்ட செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டை ஊசி வளைவுகள் உள்ள உதகையில் அனுபவமுள்ள ஓட்டுனர்கள் இயக்குவதே சிரமமான காரியம். ஆனால், உதகையில் இருந்து கிளன்மார்கன் என்ற கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தை ஒரு தற்காலிக ஓட்டுனர் இயக்கியிருக்கிறார். பாதி வழியில், தன்னுடன் பயணித்த நண்பருக்கு பேருந்தை இயக்க கற்று கொடுத்திருக்கிறார். உதகை போன்ற ஆபத்தான வளைவுகள் நிறைந்த பகுதியில் பேருந்தை இயக்கத் தெரியாத ஒருவரிடம் பேருந்தை இயக்கக் கொடுத்தது கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த பேருந்தில் பயணித்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்