தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் செஞ்சுரியனில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தவானுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாகத் தோற்றது. வெற்றிபெற வேண்டிய போட்டியை பேட்டிங்கில் சொதப்பியதால் கோட்டை விட்டது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் ரஹானே, சேர்க்கப்படாதது பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. வீரர்களின் சமீபத்திய ஃபார்மை கணக்கில் கொண்டே, ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் சனிக்கிழமை நடக்கிறது. இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகும் என்றும் அதிகம் ஸ்விங் ஆகாது என்றும் கூறப்படுகிறது. இதனால் அணியில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. வெளிநாட்டில் அதிக சராசரி வைத்திருக்காத தவான் கழற்றிவிடப்படுகிறார். அவருக்குப் பதில் முரளி விஜய்யுடன் கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று தெரிகிறது. அதே நேரம் ரோகித் சர்மாவுக்கு பதில் ரஹானே சேர்க்கப்படலாம் எனவும், ரோகித்துக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அஸ்வினை உட்கார வைத்துவிட்டு, ரஹானே சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்