[X] Close

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா.?

Congress-DMK-Alliance-continue-in-Local-Body-election-

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியை தொடர்வது என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 64 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும், கூட்டணியாக போட்டியிடுவது குறித்தும் இருவேறு கருத்துகள் நிலவியதாகத் தெரிகிறது. இறுதியில், ஏற்கனவே இருக்கும் கூட்டணியைத் தொடர்வது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close