[X] Close

1,440 மீட்டர் பிரம்மாண்ட மெக்சிகோ கேக்!

A-massive-Rosca-de-Reyes-cake-drew-crowds-in-Mexico-City

மெக்சிகோவில் பாரம்பரிய விழாவை முன்னிட்டு 1,440 மீட்டர் நீளம் கொண்ட பிரமாண்ட கேக் வடிவமைக்கப்பட்டது. 


Advertisement

மெக்சிகோவில் ஏசு பிறந்த பிறகு அவரை காண வந்த 3 அரசர்களை கவுரவிக்கும் விதமாகவும், புத்தாண்டைக் கொண்டாடும் விதமாகவும் த்ரீ கிங்க்ஸ் எனும் விழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு சுமார் 9 ஆயிரம் கிலோவில்‌ பிரம்மாண்ட கேக் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 1,440 மீட்டர் ஆகும். 

இந்தப் பிரம்மாண்ட கேக் 2 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகளாக வெட்டப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பாரம்பரிய விழாவிற்காக மெக்சிகோவில் உள்ள ஏராளமான கேக் தயாரிக்கும் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட கேக்கை உருவாக்கி இருந்தது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close