Published : 08,Jan 2018 05:30 AM

5-வது நாளாக பஸ் ஸ்டிரைக்: பொதுமக்கள் அவதி!

Tamil-Nadu-Transport-Workers--Strike-Continues

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவினர் 5ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் போதிய பேருந்துகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர். அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 

அரசு பேருந்துகளிலும் 11 ரூபாய் கட்டணத்திற்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர். தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை ‌இயக்குவதால் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தாமல் பிரபலமான நிறுத்தங்களில் மட்டும் நிறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்