Published : 28,Feb 2017 06:55 AM

வரிசை எண்களே இல்லாத 500 ரூபாய் நோட்டு

Damoh--MP---A-man-gets-Rs-500-notes-without-serial-numbers

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து வரிசை எண்களே இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.

தாமோ பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வங்கி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அவசரகதியில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்