Published : 06,Jan 2018 04:29 AM
29-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஜனவரி 29 தொடங்கும் பட்ஜெட் தொடர், பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர், மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பிப்ரவரி 1 ஆம் தேதி மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 92ஆண்டுகளாக தாக்கலாகி வந்த ரயில்வே பட்ஜெட் கடந்த முறை பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கலானது. கடந்தாண்டு போலவே இந்தாண்டும் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.