Published : 05,Jan 2018 04:10 PM
அரசு ஊழியர்கள்-போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே ஊதிய இடைவெளி!

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போக்குவரத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துத்துறையில் 10 ஆண்டுகளுக்கு குறைவாகப் பணிபுரிந்து வரும் ஓட்டுனர்கள் தற்போது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் சேர்த்து மாதம் 14,500 ரூபாய் ஊதியமாக பெற்று வருகின்றனர். தற்போது அவர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத ஊதியம் 16,800 ரூபாயாக உயரும்.
ஆனால் இதேபோன்ற தகுதியுடன் அரசின் மற்ற துறைகளில் பணிபுரிந்து வரும் ஓட்டுனர்களுக்கு மாத ஊதியமாக 19500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் கோருவது போல் 2.57 காரணி ஊதிய உயர்வு அளித்திருந்தால், அவர்களுக்கு மாத ஊதியம் மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக 19500 ரூபாய் என உயர்ந்திருக்கும்.