[X] Close

‘பஸ் ஸ்டிரைக்’ தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

Dismissal-of-the-High-Court-branch-to-inquire-into--bus-strike-

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதால், நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையேற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. இந்த விசயத்தில் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது எனக் கூறி வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close