[X] Close

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து!

Ashes-final-test--England-loses-3-wickets

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. 


Advertisement

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி, வெற்றியுடன் முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் மாசன் கிரேன் அறிமுக வீரராக இறங்கியுள்ளார். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. குக்கும் ஸ்டோன்மேனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். குக், 39 ரன்னில் ஹசல்வுட் பந்துவீச்சிலும் ஸ்டோன்மேன் 24 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும் வீழ்த்தினர். அடுத்த வந்த வின்ஸும் 25 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணி 95 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரூட்டும், மலனும் ஆடி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close