அரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

அரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
அரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

கோபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரந்தோறும் நடைபெறும் சந்தைக்கு தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோழி, ஆடு, மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. 

இந்த வாரம் சுமார் ஆயிரத்து 50‌0 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு வி‌ற்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com