ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக ஹிந்தியை ஆக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெரும்பன்மையிலும் இறுதியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் தீர்மானம் நிறைவேற்றபட்டால் ஐ.நாவில் ஒரு மொழி அதிகாரபூர்வ மொழியாகும். இப்போது ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ், ரஷியன், சைனீஸ் அரபு மொழிகள் அதிகாரபூர்வ மொழிகள்.
இந்நிலையில், மக்களவையில் பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி மொழியை அறிவிக்கச் செய்ய ஐ.நா. உறுப்பு நாடுகளின் 129 நாடுகள் ஆதரவை திரட்டப்போவதாக அறிவித்தார். மேலும், தானும், பிரதமர் மோடியும் ஐ.நா.வில் ஹிந்தியில் பேசியதை சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், ஹிந்தி மொழியை ஊக்குவிக்க வேண்டிய என்ன தேவை உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் பேசிய அவர், “ஹிந்தி நாட்டின் தேசிய மொழி கிடையாது. ஆட்சி மொழிதான். ஹிந்தியை ஊக்குவிப்பது கேள்வி எழுப்பச் செய்கிறது. ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஹிந்தியை ஆக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. அரபிக் மொழிக்கு ஹிந்தியை விட அதிக ஸ்பீக்கர்கள் இல்லை. ஆனால், அரபிக் 22 நாடுகளில் பேசப்படுகிறது. ஹிந்தி மொழி ஒரே ஒரு நாட்டில்தான் அலுவல் மொழியாக உள்ளது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், ஹிந்தி பேசாத மக்களும் இந்தியனாக இருப்பதற்குப் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?