முத்தலாக் விவாகரத்து முறையை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை சட்டம் கடந்த வாரம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களவையில் இன்று, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தால் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நேற்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, சமாஜ்வாதி கட்சி, பிஜு ஜனதாதளம் ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்கள் சந்தித்து, முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். முத்தலாக் மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவில்லை.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்