Published : 02,Jan 2018 03:27 PM

பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா!

America-Stopped-Pakistan-Fund-for-Terrorist-Issue

பாகிஸ்தானுக்கு வழங்குவதாக உறுதி ‌அளிக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது.

புத்தாண்டு பிறந்த பிறகு ட்விட்டரில் முதல் முறையாக பதிவிட்டிருந்த ட்ரம்ப், அமெரிக்கத் தலைவர்களையும் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் நினைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். கடந்த 15 ஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாகிஸ்தானுக்கு உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக கூறியிருந்த சுமார் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவியை அமெரிக்க நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து நிதி உதவி குறித்து முடிவு செய்யப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பதிவு எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்