[X] Close

ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி.

BJP-MP-Nepal-Singh-apologises-for-remark-on-soldiers-dying-during-combat

ராணுவ வீரர்கள் உயிரிழப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய பாஜக எம்.பி. நேபால் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச செய்தியாளர் ஒருவர், பாஜக எம்.பி. நேபால் சிங்கிடம், பயங்கரவாதிகளின் தாக்குதலில் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பேசிய அவர், “ராணுவத்தில் இருப்பவர்கள் நாள்தோறும் இறக்க நேரிடும். சண்டையின் போது ராணுவ வீரர்கள் இறக்காத நாடு எதாவது உண்டா? சாதாரணமாக கிராமங்களில் நடைபெறும் சண்டைகளின் போது கூட ஒரிருவருக்கு காயம் ஏற்படும்” என்றார்.

நேபால் சிங்கின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவியது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பாஜக எம்.பி. நேபால் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராணுவ வீரர்களை அவமதிப்பதற்காக எதையும் கூறவில்லை. ராணுவத்தினருக்கு ஆதரவாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறேன். அவர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் வருந்தும்படியாக நான் எதுவும் சொல்லவில்லை” என்றார். மேலும் ராணுவத்தில் அதிகமானோர் சேர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close