சில திரைப்படங்களில் வரும் வசனங்கள் கண்ணியமாக இல்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
விஜயவாடாவில் நடந்த 29-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து நேற்று அவர் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, ‘ஒரு புத்தகத்தைத் திறந்தால் அது ஓர் உலகத்தை உங்களுக்கு காட்டுகிறது. புத்தகம் நல்ல நண்பன், அதோடு நல்ல ஆசிரியனும் கூட. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சரியான பாதையில் வழிநடத்தவும் புத்தகங்கள் உதவுகின்றன. இந்திய பாரம்பரியம் புத்தகங்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. ஆனால், எத்தனை பதிப்பகங்கள் நமது நாட்டின், வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அறிவை வழங்குகின்றன. எத்தனை பதிப்பகங்கள், சமூக விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குகின்றன. எத்தனை பதிப்பகங்கள் சமூகத்தை தவறாக வழிநடத்துகின்றன என்பது பற்றிய விவாதங்கள் வேண்டும்.
அதோடு திரைப்படங்களும் இந்திய கலாசாரம், மொழி, பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். சில திரைப்படங்களில் வரும் வசனங்கள் கண்ணியமாக இல்லை. சினிமா சக்தி வாய்ந்த மீடியம். அது சமூகத்தின் கண்ணாடியாகவும் வாழ்வை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்’ என்றார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்