Published : 02,Jan 2018 03:05 AM
கைவிட்டது இங்கிலாந்து: ஐபிஎல் ஏலத்துக்கு வருகிறார் பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அந்த அணியின் ஒரு நாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பரில் இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சையில் கைதாகி விடுதலை ஆனார். அவர் மீது போலீஸ் விசாரணை நடந்து வருவதால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந் நிலையில் ஒரு நாள் போட்டி அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டேவிட் மலன் சேர்க்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதே நேரம் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல். கிரிக்கெட் ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.