[X] Close

நின்ற லாரி மீது மோதிய கார்: 3 பேர் பலி

Covai-Bus-Lorry-Accident--3-People-Die

கோவை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 


Advertisement

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற காரில் ஒன்பது பேர் பயணித்துள்ளனர். அப்போது கோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 

அத்துடன் ஆறு பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் திருப்பூரை சேர்ந்த ராகுல், பிரஷாந்த், ஜாஹித் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராகுல் என்பவர் தமிழ் மாநில காங்கரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாணவரணி தலைவர் ஆவார். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close