Published : 27,Feb 2017 05:27 AM
தவறாக அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருது

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது.
89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு லா லா லேண்ட் படம் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் மூன் லைட் படமே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில், லா லா லேண்ட் திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளையும், மூன் லைட் படம் 3 ஆஸ்கர் விருதுகளையும், ஹாக்ஸா ரிட்ஜ் படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றன.