விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெருவரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு. விவசாயியான இவர், வயல் பகுதிக்கு நடந்து செல்லும் போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பாலகுரு இறந்து கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாலகுருவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பேசிய அப்பகுதியினர், பெருவரப்பூரில் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்துவிழுந்து விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் கைவிடப்பட்டது.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?