[X] Close

நியூசிலாந்தில் முதலில் பிறந்த 2018 புத்தாண்டு!

2018-New-Year-Celebration--New-Zealand-and-Australia-First-Celebrating

உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 

நியூசிலாந்தின் ஆக்லாந்த் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இசையுடன் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் அப்பகுதியில் கண்கவர் வாணவேடிக்கையும் நடைபெற்றது. 328 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் பலவண்ணங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. 

இதேபோல், பலவகையான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் லேசர் ஒளி நிகழ்த்தப்பட்டது. இதனை அங்குள்ள மக்கள் பெரும் ஆராவாரத்துடன் கண்டுரசித்து புத்தாண்டை வரவேற்றனர். நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் சிட்னியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். மேலும் அங்கு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை காண்போரை வியப்படையச் செய்தது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close