[X] Close

2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...!

Google-Play-s-Best-of-2017--Most-popular-apps--games--music--TV-shows

2017ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2018 புதிய ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் டாப் 10 படங்கள், பாடல்கள் என பல பட்டியல்கள் வெளிவந்துள்ளன. 

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள், பாடல்கள், ஆப்-கள், கேம்கள், டிவி நிகழ்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் ’சூப்பர் மேரியோ ரன்’ புதிய வெர்சன்.


Advertisement

அத்துடன் 2017 ஆம் ஆண்டின் சிறந்த கேமாக ’கேட்ஸ்: க்ராஸ் அரினா டர்போ ஸ்டார்ஸ்’ உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆப் ஆக சாக்ரெடிக் - மேக்ஸ் (கணக்கு) அன்ஸர் & ஹோம்வொர்க் ஹெல்ப் தேர்வாகியுள்ளது. இவற்றுடன் கூகுள் ப்ளே ஸ்டோரின் 2017ஆம் ஆண்டு டாப் பாடல்கள், படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

2017-ன் டாப் 5 பாடல்கள் :

கேண்ட்ரிக் லாமரின் ‘ஹம்புள்’
ஈடி ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யூ’
கேண்ட்ரிக் லாமரின் ‘டிஎன்ஏ’
ஃப்யூச்சர் குழுமத்தின் ‘மாஸ்க் ஆஃப்’
சாம் ஹண்ட்-ன் ‘பாடி லைக் எ பேக் ரோட்’ 

2017-ன் டாப் 5 படங்கள் :

மோனா
ராஹ்க் ஒன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி
வோண்டர் உமன் (2017)
கார்டியன்ஸ் ஆஃப் தி கேளக்ஸி வால்யூம் 2
டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்

2017-ன் டாப் 5 டிவி நிகழ்ச்சிகள்:

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
ரிக் அண்ட் மார்டி
தி வாக்கிங் டெட்
தி பிக் பாங்க் தியரி
டாக்டர் ஹூ

இவை அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரின் தரவரிசை.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close