Published : 31,Dec 2017 09:16 AM

ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: திமுக நிர்வாகிகள் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்?

RK-Nagar-Loss--Dmk-officers-removed-from-party-posting

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, ஆர்.கே.நகரில் 120-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட வாங்கவில்லை. சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து பேசிய கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, ஸ்டாலின் தலைமையின் கீழ் திமுக வெற்றி பெறாது என தெரிவித்தார். மு.க.அழகிரி, ஸ்டாலினை விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்வதற்காக திமுகவின் கொறடா சக்கரபாணி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த 3 பேரும் கடந்த 4 நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திமுக நிர்வாகிகள் 120க்கும் மேற்பட்டோர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தோல்வி எதிரொலியாக ஆராய அமைக்கப்பட்ட சக்கரபாணி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று திமுக தலைமை கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடிமட்டத்தொண்டர்கள் சரியாக பணியாற்றவில்லை என்றும், சக்கரபாணி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்