Published : 31,Dec 2017 06:24 AM

ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் சுப்ரமணியன் சுவாமி

Subramanian-Swamy-who-criticizes-Rajini

 ரஜினியின் அரசியல் அறிவிப்பை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.  தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.  “இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம் தான் இவற்றை பெரிதாக காட்டுகிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். ரஜினி கட்சியின் பெயரையும், வேட்பாளர்களையும் அறிவிக்கட்டும். நான் அவரை அம்பலப்படுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்