[X] Close

ரஜினி நன்கு யோசித்து அரசியலுக்கு வந்துள்ளார்: துரைமுருகன்

Rajini-has-come-to-the-politics-DMK-Duraimurugan-Wishes

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறேன் என ரஜினி தெரிவித்திருந்தார்.இதனையடுத்து அவர் இன்று என்ன அறிவிப்பார் என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அவர் பேசும்போது தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.


Advertisement

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,  “நன்கு யோசித்துதான் ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார். ரஜினியின் வருகையால் திமுகவிற்கு ஒன்றும் இல்லை. அரசியலுக்கு வருவது அவருடைய இஷ்டம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆன்மீக அரசியல் என்பது அவருடைய பாணி. ரஜினிகாந்த்துக்கு என் வாழ்த்துக்கள். அரசியல் என்பது பெரிய களம். அதில் நின்று எதிர்கொள்ள வேண்டிய தைரியம் திமுகவிற்கு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close