Published : 27,Feb 2017 03:21 AM
குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கணினி அறிவியல் பட்டதாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாஸிம் மற்றும் அவரது சகோதரர் நயீம் ரமோடியா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரகசிய கண்காணிப்பில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததுள்ளது. வாஸிம் மற்றும் அவரது சகோதரர் நயீம் ரமோடியா இருவரும் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகள் எனவும், இருவரும் தாக்குதல் நடத்திவிட்டு சிரியா அல்லது ஈராக்குக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.