ஒருநாள் பொறுத்திருங்கள்: அரசியல் அறிவிப்பு தொடர்பாக ரஜினி பதில்

ஒருநாள் பொறுத்திருங்கள்: அரசியல் அறிவிப்பு தொடர்பாக ரஜினி பதில்
ஒருநாள் பொறுத்திருங்கள்: அரசியல் அறிவிப்பு தொடர்பாக ரஜினி பதில்

நாளை அரசியல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, ஒரு நாள் பொறுத்திருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ஐந்தாவது நாளாக சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்தார். தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை ரசிகர்கள் உடனான சந்திப்பின்போது பேசிய அவர், சினிமாவில் தாம் அறிமுகமானது முதல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது வரை, தமக்கு தமக்கு உதவியவர்களை சுட்டிக் காட்டினார். இயக்குனர் பாலச்சந்தர் தம்மை அவரின் மகன் போல் பார்த்துக்கொண்டார் என்றும் ரஜினி கூறினார். நியாயமான வழிகளில் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றும், குறுக்கு வழியில் அடைய நினைத்தால் நிம்மதியும், மதிப்பும் இருக்காது என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நாளை அரசியல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ஒரு நாள் பொறுத்திருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார். முன்னதாக டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com